Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ரயில் விபத்திற்கு காரணம் சிக்னல் கோளாறு: புதிய தகவல்

ரயில் விபத்திற்கு காரணம் சிக்னல் கோளாறு: புதிய தகவல்

ரயில் விபத்திற்கு காரணம் சிக்னல் கோளாறு: புதிய தகவல்

ரயில் விபத்திற்கு காரணம் சிக்னல் கோளாறு: புதிய தகவல்

ADDED : செப் 22, 2011 01:27 AM


Google News

சென்னை: அரக்கோணம் அருகே சித்தேரியில், கடந்த 13ம் தேதி, நடந்த ரயில் விபத்து, சிக்னல் கோளாறு காரணமாக நடந்திருக்கலாம் என, விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து நடந்த இடத்திற்கு முன்பாக உள்ள மூன்று சிக்னல்களில், முதல் இரண்டு சிக்னல்களில் மஞ்சள் விளக்கும், மூன்றாவது சிக்னலில் பச்சை விளக்கும் எரிந்ததாக, விசாரணையில் தெரிய வந்ததாக, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார். எனவே, விபத்திற்கு காரணம் சிக்னல் கோளாறாக இருக்கலாம் என, ரயில்வே அதிகாரிகள் கருதுகின்றனர். சித்தேரியில், கடந்த 13ம் தேதி, காட்பாடி பாசஞ்சர் ரயில் மீது, சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் சென்ற மின்சார ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 10 பேர் பலியாகினர்; 86 பேர் பலத்த காயமடைந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us