Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/இளம் விஞ்ஞானிகளை உருவாக்க இலவச பயிற்சி முகாம் : குற்றாலத்தில் துவங்க வலியுறுத்தல்

இளம் விஞ்ஞானிகளை உருவாக்க இலவச பயிற்சி முகாம் : குற்றாலத்தில் துவங்க வலியுறுத்தல்

இளம் விஞ்ஞானிகளை உருவாக்க இலவச பயிற்சி முகாம் : குற்றாலத்தில் துவங்க வலியுறுத்தல்

இளம் விஞ்ஞானிகளை உருவாக்க இலவச பயிற்சி முகாம் : குற்றாலத்தில் துவங்க வலியுறுத்தல்

ADDED : செப் 19, 2011 12:01 AM


Google News

குற்றாலம் : 'இளம் விஞ்ஞானிகளை உருவாக்க குற்றாலத்தில் இலவச பயிற்சி முகாம் துவக்கப்பட வேண்டும்' என மாணவ, மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மாணவ, மாணவிகள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கத்துடன் தமிழக அரசு உயர்கல்வி துறையும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றமும் இணைந்து 'இளம் மாணவர் அறிவியல் திட்டம்' என்ற திட்டத்தை துவக்கி கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற இளைஞர்களை தேர்ந்தெடுத்து இளம் விஞ்ஞானிகளாக உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.



இதற்கான பயிற்சி முகாமில் ஊராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. 2 மாவட்டங்களுக்கு ஒரு கல்லூரி என தேர்வு செய்யப்பட்டு அந்த கல்லூரியில் வைத்து இந்த பயிற்சி முகாம் நடக்கிறது. ஒருமாத காலம் வரை மாணவர்கள் இந்த கல்லூரியில் தங்கி இயற்பியல், வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழல், கணினி அறிவியல் துறையில் ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி வரை அனைத்தும் கற்பிக்கப்படும்.



மேலும் தற்போது மாணவ, மாணவிகள் நலன் கருதி இலவச லேப்டாப் வழங்கி கவுரவித்து வருவதும் மாணவ, மாணவிகளின் வாழ்க்கைத்தரம் உயர ஒரு மைல் கல்லாக விளங்கி வருகிறது. இந்த பயிற்சியில் ஆங்கில புலமை, விளையாட்டு போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் திட்டமிட்ட பாடங்கள் எதுவும் கிடையாது, தொழில் வல்லுநர்கள், பேராசிரியர்கள் மூலம் பாடங்கள் மற்றும் கருத்தரங்கம் நடைபெறும்.



ஒரு பள்ளிக்கு 2 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 5 மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டி நியமிக்கப்படுவர். மாணவர்கள் தேர்வு செய்யும்போது 8ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் மதிப்பெண், 9ம் வகுப்பு அரையாண்டு தேர்வு மதிப்பெண் மற்றும் அறிவியல் திறமை, ஊக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்வது வழக்கம். ஒரு மாவட்டத்திலிருந்து 40 மாணவர்கள் அந்தந்த பயிற்சி பள்ளி தலைமையாசிரியர் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.



இந்த முகாம் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் தலைமை கல்வி அதிகாரி ஒத்துழைப்புடன் நடைபெறும். இந்த முகாம் ஒழுங்காக செயல்படுகிறதா என கண்காணிக்க மாவட்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யும் மாணவ, மாணவிகளுக்கு தங்குமிடம், உணவு, புத்தகங்கள் அரசு மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முகாம் நடத்த 2 லட்சம் ரூபாயும் அரசு வழங்கி வருகிறது. மேலும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றமும், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்து இன்ஸ்பயர் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இதன்படி 6ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர் ஒருவரை ஒவ்வொரு பள்ளியிலும் தலைமையாசிரியர் தேர்ந்தெடுப்பார். அந்த மாணவருக்கு ரூ.5 ஆயிரம் ஆண்டுதோறும் 10ம் வகுப்பு படிக்கும் வரையிலும் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது.



தென்காசி கல்வி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் மையப்பகுதியாகவும், இயற்கையின் வரப்பிரசாதமாக கருதப்படும் குற்றாலத்தில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்க சுற்றுவட்டார கிராம பகுதி மாணவர்கள் பங்கு பெற்று பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி முகாம் துவக்கப்பட வேண்டும் என்பதே வருங்கால இளம் விஞ்ஞானிகளின் 4 ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us