வரும் 24 முதல் எஸ்.வி., பக்தி சேனலில் சுப்ரபாத சேவை நேரடி ஒளிபரப்பு
வரும் 24 முதல் எஸ்.வி., பக்தி சேனலில் சுப்ரபாத சேவை நேரடி ஒளிபரப்பு
வரும் 24 முதல் எஸ்.வி., பக்தி சேனலில் சுப்ரபாத சேவை நேரடி ஒளிபரப்பு
ADDED : செப் 17, 2011 09:43 PM

நகரி:திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் மூலவரான வெங்கடேச பெருமாளுக்கு அதிகாலையில் நடத்தப்படும் சுப்ரபாத சேவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப, ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.பக்தர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே தினமும் சுப்ரபாத சேவையின் கோவில் அர்ச்சகர்கள் சுவாமி முன் படிக்கின்ற திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களையும், பூஜைக்கான நிகழ்ச்சிகளையும் பக்தி பரவசத்துடன் எஸ்.வி., பக்தி சேனல் ஒளிபரப்பு மூலம் கண்டுகளிக்க திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.வரும் 24ம் தேதி அதிகாலை முதல், தினமும் சுப்ரபாத சேவை ஒளிபரப்படும்.
இந்த ஒளிபரப்பு வெற்றி அடைந்த பின், அடுத்த கட்டமாக ஆர்ஜித சேவைகளான அபிஷேகம், தோமாலை, அர்ச்சனை போன்ற சேவைகளுக்கான நிகழ்ச்சிகளை, 'கோவிந்த பரமானந்தம்' என்ற பெயரில் ஒளிபரப்பு செய்ய உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.