ADDED : செப் 16, 2011 09:57 PM
கோவை : கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின், தமிழ்த் துறையிலுள்ள கிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை சார்பில் அனைத்து கல்லூரி அளவிலான கட்டுரைப் போட்டி நடக்கிறது.
வரும் 20ம் தேதி நடக்கும் இப்போட்டியில், ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் இரண்டு மாணவர்கள் பங்கேற்கலாம். போட்டி நடைபெறும் நாளில், பகல் 3.10 மணிக்கு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வர், தமிழ்த்துறை தலைவர் அனுமதி பெற்று பதிவு படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். போட்டிக்கு வந்து செல்லும் மாணவ, மாணவியர் தமது சொந்த செலவில் வந்து செல்ல வேண்டும். பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். போட்டிக்குரிய தலைப்பு,போட்டி துவங்குவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன் அறிவிக்கப்படும். பங்குபெறும் மாணவர்கள் முனைவர் பழனிச்சாமி, தமிழ்த்துறை தலைவர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோவை-641029 என்ற முகவரிக்கு, பதிவு படிவத்தை பூர்த்தி செய்து 19ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.