உலக வர்த்தகத்தில் 3வது இடத்தை பிடிக்கும் இந்தியா; ஆய்வில் தகவல்
உலக வர்த்தகத்தில் 3வது இடத்தை பிடிக்கும் இந்தியா; ஆய்வில் தகவல்
உலக வர்த்தகத்தில் 3வது இடத்தை பிடிக்கும் இந்தியா; ஆய்வில் தகவல்
ADDED : மார் 23, 2025 08:06 PM

புதுடில்லி: அடுத்த 5 ஆண்டுகளில் உலக வர்த்தகத்தில் இந்தியா 6 சதவீத பங்களிப்புடன், 3வது இடத்தில் இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டி.எச்.எல்., மற்றும் நியூயார்க் யுனிவர்சிட்டி ஸ்டெர்ன் ஸ்கூல் ஆப் பிசினஸ் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், அடுத்த 5 ஆண்டுகளில் உலக வர்த்தகத்தில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய நாடுகளில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சீனா 12 சதவீதத்துடன் முதல் இடத்திலும், அமெரிக்கா 10 சதவீதத்துடன் 2வது இடத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டில் உலக வர்த்தகத்தில் இந்தியா 13வது இடத்தில் இருந்தது. இந்தக் காலகட்டங்களில் உலக வர்த்தக வளர்ச்சி 2 சதவீதமாக இருந்த போதும், இந்தியாவின் வளர்ச்சி 5.2 சதவீதமாக இருந்துள்ளது.
இந்தியாவின் விரைவான வணிக வளர்ச்சி, அதன் வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் பன்னாட்டு வணிகத்தில் அதிகரித்து வரும் பங்களிப்பு ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவை விட சீனா வர்த்தகம் சார்ந்த பொருளாதாரத்தில் முன்னிலை வகிப்பதாக கருதப்பட்டாலும், 2023ம் ஆண்டில் இந்தியாவின் சரக்கு வர்த்தகம், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சீனாவை விட அதிகரித்தே காணப்பட்டுள்ளது. அதாவது, சரக்கு மற்றும் சேவையில் சீனாவை விட இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எதிர்கால வர்த்தக வளர்ச்சியானது, உற்பத்தி துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் இன்னும் வலுப்பெறும் என்று அந்த ஆய்வின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.