/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ஆற்றில் குளிக்கச்சென்ற வாலிபர் இருவர் மாயம்ஆற்றில் குளிக்கச்சென்ற வாலிபர் இருவர் மாயம்
ஆற்றில் குளிக்கச்சென்ற வாலிபர் இருவர் மாயம்
ஆற்றில் குளிக்கச்சென்ற வாலிபர் இருவர் மாயம்
ஆற்றில் குளிக்கச்சென்ற வாலிபர் இருவர் மாயம்
ADDED : செப் 16, 2011 12:13 AM
பாபநாசம்: பாபநாசம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இரு வாலிபர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அவரது உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் கஞ்சிமேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் முருகன் என்கிற அப்பு (25) கேபிள் 'டிவி'யில் வேலை செய்து வருகிறார். பாபநாசம் செட்டி தெருவை சேர்ந்த ஞானபிரகாசம் மகன் வினோத் (22) மற்றும் நண்பர்களுடன் நேற்று மதியம் 3 மணியளவில் பாபநாசம் குடமுருட்டி ஆற்றில் குளிக்கச் சென்றனர். இதில் அப்பு மற்றும் வினோத் இருவரும் ஆற்றில்குளித்து கொண்டிருக்கும்போது ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்ட அருகில் இருந்த நண்பர்கள் ஆற்றில் தேடியும் இருவரும் கிடைக்காததால் பாபநாசம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பாபநாசம் தீயணைப்பு துறை அலுவலர் சேதுராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் தேடி வருகின்றனர். நேற்றிரவு மழை பெய்து கொண்டிருந்ததால் வாலிபர்களை தேடும் பணியில் தொய்வ ஏற்பட்டுள்ளது.


