/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கோபியில் தொடரும் திருட்டு, வழிப்பறி: ஆசிரியர் வீட்டில் 19 பவுன் திருட்டுகோபியில் தொடரும் திருட்டு, வழிப்பறி: ஆசிரியர் வீட்டில் 19 பவுன் திருட்டு
கோபியில் தொடரும் திருட்டு, வழிப்பறி: ஆசிரியர் வீட்டில் 19 பவுன் திருட்டு
கோபியில் தொடரும் திருட்டு, வழிப்பறி: ஆசிரியர் வீட்டில் 19 பவுன் திருட்டு
கோபியில் தொடரும் திருட்டு, வழிப்பறி: ஆசிரியர் வீட்டில் 19 பவுன் திருட்டு
ADDED : செப் 14, 2011 01:10 AM
கோபிசெட்டிபாளையம்: கோபி சப் டிவிஷனில் தொடரும் திருட்டு, கொள்ளை சம்பவங்களால் மக்கள் நிம்மதியின்றி உள்ளனர். பேராசிரியிடம் நடந்த வழிப்பறி சம்பவத்துக்கு பிறகு, மீண்டும் கோபியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு போனது.கோபி சப் டிவிஷனில், கோபி, கவுந்தப்பாடி, சிறுவலூர், நம்பியூர், கடத்தூர், வரப்பாளையம், திங்களூர், கோபி மகளிர் ஸ்டேஷன் ஆகியவை அமைந்துள்ளன. சப் டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பட்டப்பகலில் திருடர்களின் ஆதிக்கம் பெருகியுள்ளது. ஒரு மாதமாக தொடர்ச்சியாக நடக்கும் திருட்டு சம்பவங்களால், கோபி சப் டிவிஷனில் வசிக்கும் மக்கள் நிம்மதியின்றி உள்ளனர்
ஆகஸ்ட் மாதம் தேதி வாரியாக நடந்த திருட்டு சம்பவங்கள்:
* 1ம் தேதி வரப்பாளையம் காளியப்பன் வீட்டில் ஒரு பவுன் நகை, 14 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருட்டு போனது.* 7ம் தேதி கவுந்தப்பாடி சண்முகம் என்ற கூலித்தொழிலாளியிடம், கத்தியை காட்டி வழிப்பறி சம்பவம் நடந்தது.* 8ம் தேதி கவுந்தப்பாடியில் கடையில் நின்றிருந்த சென்னையை சேர்ந்த விற்பனை பிரதியிடம் 15 ஆயிரம் ரூபாயுடன் சூட்கேஸ் திருடப்பட்டது.* 11ம் தேதி சிறுவலூர் ஸ்டேஷனுக்குப்பட்ட குதிரைக்கல்பாளையம் சோமன் என்ற விவசாயியிடம், கத்தியை காட்டி வழிப்பறி சம்பவம் நடந்தது.* 11ம் தேதி கோபி ஸ்டேஷனுக்குட்பட்ட வேட்டைக்காரன் கோவில் பகுதியில் ஷேக்முகமது என்பவரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி சம்பவம் நடந்தது.* 13ம் தேதி திங்களூர் ஸ்டேஷனுக்குட்பட்ட, பச்சாபாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தன் வீட்டில் 4.5 பவுன் திருடப்பட்டது.* 24ம் தேதி கோபி முத்துசா வீதியை சேர்ந்த அப்துல்லா வீட்டில் எட்டு பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.* 30ம் தேதி நம்பியூர் ஸ்டேஷனுக்குட்பட்ட மீன்காரம்பாளையம் தங்கராஜ் வீட்டில் 1.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை கொள்ளை அடிக்கப்பட்டது.
செப்டம்பர் 7ம் தேதி கோபியில் பட்டப்பகலில் மொபெட்டில் சென்ற பேராசிரியை கோமதி என்பவரிடம் 10 பவுன் நகை பறிக்கப்பட்டது. இச்சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று முன்தினம் இரவு ல.கள்ளிபட்டி தில்லை நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சண்முகநாராயணன்(67) என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து 18 நகை திருட்டு போனது. இதுவரை நடந்துள்ள 15க்கும் மேற்பட்ட சம்பவங்களில் சென்ற வாரம் கவுந்தபாடியில் பானுமதி என்பவரிடம் இரு கொள்ளையர்கள் வழிபறி செய்தபோது, பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பதற்கு, போலீஸாரின் ரோந்து பணி சரியாக இல்லையா; போலீஸ் துறை சார்பில் ரோந்து செல்ல உரிய வசதி செய்து இல்லையா? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.