Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

PUBLISHED ON : செப் 14, 2011 12:00 AM


Google News

கலக்கத்தை தரும் கல்மீன்



எதிரிகளிடம் இருந்து, தங்களைத் தற்காத்துக் கொள்ள எல்லா விலங்குகளுமே தகவமைப்பு பெறுகின்றன.கல்லிற்கும், தனக்கும் வித்தியாசம் இல்லாத தகவமைப்பை சைசேன் சியா வெருகோசா என்னும் மீன் பெற்றுள்ளது.

இந்த மீன் தமிழில் கல்மீன் என்று அழைக்கப்படுகிறது. கல் போன்று உருவம் மட்டுமில்லாமல், எந்தக் கல்லில் உள்ளதோ அந்தக் கல்லின் நிறத்திற்கேற்பவும் மாறுகிறது. இந்த மீன்கள் கடலுக்கடியில் உள்ள கற்களிடையே வசிக்கின்றன.தோற்றம் மட்டுமின்றி, இந்த தோலிலும் எதிரிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் சாதனங்கள் உள்ளன. உடலில் நச்சுப் பொருள் உள்ள முட்கள் உள்ளன. இந்த மீனைத் தொட்டவுடன், முட்களின் வழியாக நச்சுப் பொருள் உடலின் உள்ளே சென்று, உடலை முடக்கி வைத்து விடும். இந்த மீன் நச்சின் அளவு உடலில் அதிகரிக்கும் போது மரணமும் ஏற்படலாம்.



தகவல் சுரங்கம்



பெண்களின் நூற்றாண்டு



முதன்முதலில் பெண்கள் தினம் 1911ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. எனவே 2011ம் ஆண்டு பெண்களின் நூற்றாண்டு விழாவாக கொண்டாட படுகிறது.இதனையொட்டி முழுக்க, முழுக்க பெண்களே பங்கேற்கும் வகையில் 'விண்ணை வியக்கும் பெண்ணே' என்ற ரேடியோ தொடரை 'விக்ஞான் பிரசார்' என்ற அமைப்பு நடத்துகிறது.



இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சென்னை, தூத்துக்குடி, புதுச்சேரி ரேடியோ ஸ்டேஷன்களில் ஒலிபரப்பு செய்யப் படுகிறது.நிகழ்ச்சியின் முடிவில் கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடை எழுதும் நேயர்களுக்கு பரிசுகள் டில்லியில் உள்ள விக்ஞான் பிரசார் நிறுவனத்தால் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பெண்களின் நிலை, பெண் கல்வி ஆட்சியமைப்பில் பெண்கள், பெண்களின் உடல் நலன், சுயஉதவிக்குழுக்கள், பெண் விஞ்ஞானிகள், பெண் இயக்கங்கள் போன்றவை கருப்பொருட்களாக உள்ளன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us