/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அறிவிப்பு பலகையில் வேன் மோதி ஒருவர் பலி: எட்டு பேர் படுகாயம்அறிவிப்பு பலகையில் வேன் மோதி ஒருவர் பலி: எட்டு பேர் படுகாயம்
அறிவிப்பு பலகையில் வேன் மோதி ஒருவர் பலி: எட்டு பேர் படுகாயம்
அறிவிப்பு பலகையில் வேன் மோதி ஒருவர் பலி: எட்டு பேர் படுகாயம்
அறிவிப்பு பலகையில் வேன் மோதி ஒருவர் பலி: எட்டு பேர் படுகாயம்
ADDED : செப் 13, 2011 02:01 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே சாலையோர அறிவிப்பு பலகையில் வேன் மோதிய
விபத்தில், கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பரிதாபமாக பலியானார்.
படுகாயமடைந்த
எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம்,
பாலக்காடு கன்னந்தேரியை சேர்ந்தவர் சிவராஜ் (38). அவர், தனது
குடும்பத்தினருடன், டெம்போ டிராவல்ஸ் வேனில் திருப்பதி கோவிலுக்கு
சென்றுள்ளார். வேனை, அதே பகுதியை சேர்ந்த முருகன் (44) என்பவர் ஓட்டி
வந்துள்ளார். கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு, நேற்று முன்தினம் சொந்த
ஊருக்கு புறப்பட்டுள்ளனர். நேற்று காலை 6.45 மணியளவில், குமாரபாளையம்
கச்சேரி பிரிவு சாலை அருகே வந்தபோது, அங்கிருந்த சுங்கச்சாவடி கட்டண
அறிவிப்பு பலகை மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், சிவராஜ்
சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும், அபர்ணா (5), ஸ்ரீதேவி (6),
ராஜேந்திரன் (44), பிரியா (31), ரஞ்சிதா (4), தனம் (36), ரேஷ்மா (7)
மற்றும் வேன் டிரைவர் முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள்
அனைவரும், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்கு
பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.