/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ரேஷன் கடைகளில் உளுந்து, பருப்பு காரைக்குடியில் நுகர்வோர் அவதிரேஷன் கடைகளில் உளுந்து, பருப்பு காரைக்குடியில் நுகர்வோர் அவதி
ரேஷன் கடைகளில் உளுந்து, பருப்பு காரைக்குடியில் நுகர்வோர் அவதி
ரேஷன் கடைகளில் உளுந்து, பருப்பு காரைக்குடியில் நுகர்வோர் அவதி
ரேஷன் கடைகளில் உளுந்து, பருப்பு காரைக்குடியில் நுகர்வோர் அவதி
ADDED : செப் 07, 2011 10:43 PM
காரைக்குடி : ரேஷன் கடைகளில் உளுந்து, துவரம் பருப்பு தட்டுப்பாடால் நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காரைக்குடி தாலுகாவில் வசிக்கும் 81,000 கார்டுதாரர்களுக்கு 129 கடைகள் மூலம் அரிசி, சீனி போன்ற ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
மாதந்தோறும் முதல் ஐந்து தேதிக்குள் கடைகளுக்கு செல்லும் நுகர்வோர்களுக்கு உளுந்து, துவரம் பருப்பு, பாமாயில் தடையின்றி வழங்கப்படுகின்றன. காலதாமதமாக செல்வோருக்கு அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற பொருட்கள் குறித்து கேட்டால் 'ஸ்டாக்' இல்லை. 'இன்று போய் நாளை வாருங்கள்' என கடைக்காரர்கள் பதிலளிப்பது வாடிக்கையாக உள்ளது. காரைக்குடி பகுதியில் வசிக்கும் மக்கள் ரேஷன் பொருட்கள் பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.ரேஷன் கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், '' சில வாரங்களாக பருப்பு, உளுந்து, பாமாயில் சப்ளை குறைவாக உள்ளது. உதாரணமாக, 900 கார்டுதாரர்கள் உள்ள கடைகளுக்கு முதல் தவணையாக 50 சதவீத பொருட்களும், இரண்டாம் தவணையாக 20ம் தேதிக்கு மேல் மீதமுள்ள கார்டுதாரர்களுக்கு பொருட்களும் அனுப்பப்படுகின்றன. இதனால், நுகர்வோருக்கு தொடர்ச்சியாக பொருட்கள் வழங்குவதில் சிக்கல் உள்ளது. 'ஸ்டாக்' பற்றாக்குறையால் சில பொருட்கள் மாதம் முழுவதும் கடைகளுக்கு சப்ளை செய்வதில்லை, என்றார்.மாவட்ட நிர்வாகம் காரைக்குடி பகுதி மக்களின் நலன் கருதி ரேஷன் பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.