/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அதே அதிகாரத்துடன் செயல்படுத்த வேண்டும் : இலங்கை எம்.பி.,இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அதே அதிகாரத்துடன் செயல்படுத்த வேண்டும் : இலங்கை எம்.பி.,
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அதே அதிகாரத்துடன் செயல்படுத்த வேண்டும் : இலங்கை எம்.பி.,
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அதே அதிகாரத்துடன் செயல்படுத்த வேண்டும் : இலங்கை எம்.பி.,
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அதே அதிகாரத்துடன் செயல்படுத்த வேண்டும் : இலங்கை எம்.பி.,
நாகர்கோவில் : முன்னாள்பிரதமர் ராஜிவ்காந்தி-இலங்கைமுன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஆகியோர் செய்து கொண்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை இந்திய அரசும், மாநில அரசும், அரசியல் கட்சிகளும் அதே அதிகாரத்துடன் செயல்படுத்த வலியுறுத்தவேண்டும் என இலங்கை மட்டகிளப்பு எம்.பி., சீனிதம்பியோகேஸ்வரன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறினார்.இன்று 2ம்தேதி சிவசேனா (தமழ்நாடு) சார்பில் மேல்புறம் ஜங்சனில் நடைபெறும் விநாயகர்சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தில் பங்கு பெற வந்த இலங்கை மட்டகிளப்பு எம்.பி., சீனிதம்பியோகேஸ்வரன் நாகர்கோவில் வந்தார்.
கடந்த 8 மாதகாலமாக தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வுகாணப்படவில்லை. நாங்கள் கூறியபடி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதும், போரின் போது காணமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதும், போரின் போது கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும், தமிழ்மக்களுக்கு அதிகாரம் வழங்கபட வேண்டும் என்பதும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசு இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என கூறியது. ஆனால் ஆயிரம் வீடுகள் கூட கட்டப்படவில்லை. அதுபோன்று இந்திய அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிஉதவிகள், பல்வேறு உதவிகள் செய்தது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது சென்றடையவில்லை. இனியாவதுநிதிகொடுக்கப்படும் போது தமிழ்தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்துகொடுக்கபடவேண்டும் என கூறுகிறோம். எங்களுடன் சேர்ந்து கொடுத்து இருந்தால் சிலருக்காவது கிடைத்து இருக்கும்.அண்மையில்மீண்டும் இலங்கையில் அவசரகாலநிலை ஏற்படுத்தப்பட்டது. நாங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் அடிப்படையில் திரும்பபெறப்பட்டது. சமீபகாலமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் போது இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்து அரசியல் கட்சிகள் குரல்கொடுக்கும். தேர்தலுக்கு பிறகு கண்டுகொள்வது கிடையாது. ஆனால் தமிழகமுதல்வர் ஜெ., தேர்தலுக்கு பிறகும் தமிழ்மக்களுக்காக குரல் கொடுத்துள்ளதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதுபோன்று தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.தூக்குதண்டனையை பொறுத்தவரை இலங்கையில் கூட பவுத்த அரசு மரணதண்டனை நிறைவேற்றுவது இல்லை. ஆனால் அகிம்சையை கடைபிடித்து வரும் இந்தியாவில் தூக்குதண்டனை என்பது ஏற்புடையது அல்ல. இந்திய அரசும், மாநில அரசும், இங்குள்ள அரசியல் கட்சிகளும் இலங்கை தமிழ்மக்களின் நலன்கருதி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அதே அதிகாரத்துடன் செயல்படுத்த வலியுறுத்தவேண்டும் என்பதே எங்கள் நோக்கம் ஆகும். இவ்வாறு எம்.பி., சீனிதம்பி யோகேஸ்வரன் கூறினார். பேட்டியின் போது, சிவசேனா (தமிழ்நாடு) மாநில தலைவர் ராஜேஷ், மாநில பொதுச்செயலாளர் சிவாஜி, மாவட்ட தலைவர் பரமேஸ்வரன்தம்பி, இளைஞரணி அமைப்பாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.