Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/இ.எஸ்.ஐ., மருத்துவமனையை கண்டித்து 29ல் ஆர்ப்பாட்டம்

இ.எஸ்.ஐ., மருத்துவமனையை கண்டித்து 29ல் ஆர்ப்பாட்டம்

இ.எஸ்.ஐ., மருத்துவமனையை கண்டித்து 29ல் ஆர்ப்பாட்டம்

இ.எஸ்.ஐ., மருத்துவமனையை கண்டித்து 29ல் ஆர்ப்பாட்டம்

ADDED : ஆக 26, 2011 01:06 AM


Google News
ஓசூர்: ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து, ஐ.என்.டி.யு.சி., கவுன்சில் சார்பில், 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஐ.என்.டி.யு.சி., கவுன்சில் மாவட்ட தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன் வெளியிட்ட அறிக்கை: ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் செயல்படும் இ.எஸ்.ஐ., மருத்துவமனை போதிய டாக்டர்கள், மருத்துவ வசதிகள் இல்லாமல் செயல்படுகிறது. 50 பெட் வசதி இருந்தும், மருத்துவ சிகிச்சைக்கு வரும் தொழிலாளர்களை, மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டாயப்படுத்தி அனுப்புகின்றனர்.

நோயாளிகளை உடனுக்குடன் அழைத்து செல்வதற்கு, ஆம்புலன்ஸ் வசதியில்லை. மயக்க மருந்து டாக்டர் இல்லாததால், ஆபரேஷன்கள் செய்ய முடியவில்லை. மாதந்தோறும் சம்பளத்தில் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ., வரியாக, 1,500 ரூபாய் வரை செலுத்துகின்றனர். ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மொத்தம், 45 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் ஆண்டுதோறும் இ.எஸ்.ஐ., நிர்வாகத்திற்கு, 6 கோடி ரூபாய் வரி செலுத்துகின்றனர். ஆனால், இ.எஸ்.ஐ., மருத்துவமனையை பராமரிக்கவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் இ.எஸ்.ஐ., நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. வரும் 29ம் தேதி, ஐ.என்.டி.யு.சி., மாவட்ட கவுன்சில் சார்பில் இ.எஸ்.ஐ., நிர்வாகத்தை கண்டித்தும், மருத்துவமனையில் ஏழை, எளிய தொழிலாளர்கள் எளிதாக அனைத்து சிகிச்சை வசதிகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிலாளர்களும், ஐ.என்.டி.யு.சி., நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us