/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விஜயகாந்த் பிறந்தநாள் விழா தே.மு.தி.க., கொண்டாட்டம்விஜயகாந்த் பிறந்தநாள் விழா தே.மு.தி.க., கொண்டாட்டம்
விஜயகாந்த் பிறந்தநாள் விழா தே.மு.தி.க., கொண்டாட்டம்
விஜயகாந்த் பிறந்தநாள் விழா தே.மு.தி.க., கொண்டாட்டம்
விஜயகாந்த் பிறந்தநாள் விழா தே.மு.தி.க., கொண்டாட்டம்
ADDED : ஆக 26, 2011 12:21 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி தே.மு.தி.க., வினர் நலத்திட்டங்கள் வழங்கினர்.
விழுப்புரத்தில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் எம்.எல். ஏ., தலைமையில் தே.மு.தி.க., வினர் கட்சிக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினர். நகராட்சி பிரசவ விடுதியில் நேற்று பிறந்த பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுக்காக இலவச வாட்டர் பெட்கள் வழங்கப்பட்டது. வேலா காதுகேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. ஏழை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பிறந்த நாள் விழாவில் நகர செயலாளர் பாபு, பொதுக்குழு உறுப்பினர் பாலு, பட்டதாரி ஆசிரியர் அணி துணை செயலாளர் துரைசாமி, கேப்டன் மன்றம் ராஜசந்திரசேகரன், ஏழுமலை, வர்த்தக அணி சேகர், இளைஞரணி பிரபு, விவசாய அணி அயில், நகர அவைத் தலைவர் ஆதவன்முத்து, ஒன்றிய செயலாளர்கள் ஜெயமூர்த்தி, பாலகுரு, பொருளாளர் கணேஷ், மணிகண்டன், உதயா, சிவா, ராவுத்தர், பிரகாஷ், சுபாஷ், செந்தில், மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.