PUBLISHED ON : ஆக 26, 2011 12:00 AM
மழைக்கால ஷால்கள்
மழைக்காலத்தில், குடைக்கு அடுத்தபடியாக அதிகமாக விற்பனையாகும் பொருள் ஷால் ஆகும். பெண்கள் முக்காடு போல, ஷாலை பயன் படுத்துவதால் பனிக்காற்று காதின் வழியாக செல்லாமல் பாதுகாக்கின்றது. இந்தியாவில் அரசியல், மணிவிழா, பாராட்டு விழா போன்றவற்றில் மட்டுமே ஷால்கள் பரிசுப் பொருட்களாக வழங்கப்படுகின்றன. வட மாநிலங் களில் தனி நபர்களுக்கான பரிசுப் பொருட்களிலும் ஷால்கள் முக்கிய இடம் பெறுகின்றன. குஜராத்தின் கட்ச் ஷால், காஷ்மீரில் ஆட்டு ரோமங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஷால்கள் விலை அதிகமாக இருக்கும். மீரட் ஷால்களின் விலை குறைவாக இருக்கும். சர்வோதய சங்கங்கள் கதரில் ஷால் தயாரிக்கின்றன. இவை அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்றதாக உள்ளன. இயந்திரங்களில் தயாரிக்கப்பட்ட ஷால்களை விட, கைவினைக் கலையில் செய்யப்படும் ஷால் களையே, இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் விரும்பி வாங்குகின்றனர்.
தகவல் சுரங்கம்
விவாகரத்து கொண்டாட்டங்கள்
இந்தியாவில் நிறைய விவாகரத்துகள் ஏற்படுவது போல இருந்தாலும், உலக புள்ளிவிபரத்தில், உலகில் விவாகரத்துகள் குறைவாக நடைபெறும் நாடுகளில் ஒன்று இந்தியாவாகும். 'விவாகரத்து என்பது மைனஸ் பாயின்ட் அல்ல' என்பதை, இந்தியா இப்போது தான் ஏற்றுக் கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பிறந்த தினம், திருமண நாள் போன்று, விவாகரத்தையும் கொண்டாடுகின்றனர். இதற்கென அங்கு விவாகரத்து ஸ்பெஷல் கேக்குகள் வடிவமைக்கப் படுகின்றன. பார்ட்டிகள் தரப்படுகின்றன. இந்த தவறான கலாசாரம் இந்தியாவில் தற்போது மெட்ரோபாலிடன் நகரங்களிலும் வந்து விட்டது. ஐதராபாத் பேக்கரிகளில், விவாகரத்து ஸ்பெஷல் கேக்குகள் கிடைக்கின்றன. 'சமாதியின் மேல் கல்யாண மோதிரம்' இருப்பது, விவாகரத்து ஸ்பெஷல் கேக்குகளின் வடிவத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். 'விடுதலை-எல்லாவற்றில் இருந்தும் விடுதலை' என கேக் வாசகம் இருப்பது, விவாகரத்து கேக்குகளின் வாசகத்திற்கு ஓர் உதாரணமாகும்.