/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இரவில் சைக்கிள் ரோந்து :திருப்பூரில் அறிமுகம்இரவில் சைக்கிள் ரோந்து :திருப்பூரில் அறிமுகம்
இரவில் சைக்கிள் ரோந்து :திருப்பூரில் அறிமுகம்
இரவில் சைக்கிள் ரோந்து :திருப்பூரில் அறிமுகம்
இரவில் சைக்கிள் ரோந்து :திருப்பூரில் அறிமுகம்
ADDED : ஆக 23, 2011 11:23 PM
திருப்பூர் : திருப்பூரில் இரவுநேர குற்றங்களை தடுக்க சைக்கிள் ரோந்து போலீஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, மொபைல் ரோந்து வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பிரதான ரோடுகள், வங்கிகள், கோவில்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், 'டாஸ்மாக்' மதுக்கடைகள் உள்ளிட்ட பகுதிகளில், இவ்வாகனங்கள் பகல் - இரவு நேரங்களில் இயக்கப்படுகின்றன; குற்றச்செயல்களை தடுப்பதுடன், பிரச்னையாகும் பகுதிகளுக்கு போலீசார் உடனுக்குடன் சென்று சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. திருப்பூரில் போலீஸ் தேவைக்கு ஏற்ப, போதிய வாகன வசதி இல்லாததால், வாகனங்கள் கூடுதலாக கேட்டு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் உயரதிகாரிகளுக்கு மட்டுமே ஜீப் வசதி உள்ளதால், மற்ற போலீசார் சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இரவுநேர குற்றங்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில், சைக்கிள் ரோந்து போலீஸ் திட்டம் திருப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; எஸ்.பி., பாலகிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார். வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தலா நான்கு வீதம் எட்டு சைக்கிள்கள், திருப்பூர் மாவட்ட காவல்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் சிக்கன நடவடிக்கை என்பதுடன் ஜீப் போன்ற பெரிய வாகனங்கள் செல்ல முடியாத சிறிய சந்து, வீதிகளுக்குள் சைக்கிள் ரோந்து போலீசார் சென்று, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதைத்தொடர்ந்து மோட்டார் பைக் ரோந்து திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, என, எஸ்.பி., பாலகிருஷ்ணன் கூறினார்.