/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தடுப்பு சுவரில் பஸ் மோதியதில் 3 பேர் காயம்தடுப்பு சுவரில் பஸ் மோதியதில் 3 பேர் காயம்
தடுப்பு சுவரில் பஸ் மோதியதில் 3 பேர் காயம்
தடுப்பு சுவரில் பஸ் மோதியதில் 3 பேர் காயம்
தடுப்பு சுவரில் பஸ் மோதியதில் 3 பேர் காயம்
ADDED : ஆக 23, 2011 01:07 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டோல்கேட்டில் தடுப்புசுவற்றில் அரசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பயணிகள் காயமடைந்தனர்.
சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் சென்றுக்கொண்டிருந்தது. சேலத்தை சேர்ந்த டிரைவர் சம்பத் (50) பஸ்சை ஓட்டி சென்றார். பஸ் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பையனப்பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள டோல்கேட் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து டோல்கேட் தடுப்பு சுவற்றில் மோதியது. இதில், பஸ்சில் பயணம் செய்த வாணியம்பாடியை அடுத்த சங்கிலிகுப்பம் ஜெயலட்சுமி (21), சேலம் பிரியாஜோசப் (49), பெங்களூரு மோகனசுந்தரம் (28) ஆகிய மூன்று பயணிகளும் காயமடைந்து சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.