ADDED : ஆக 22, 2011 01:34 PM
புதுடில்லி : உள்நாட்டு சந்தைகளில் மஞ்சளின் தேவை அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் மஞ்சளின் விலை குவிண்டாலுக்கு ரூ.70 முதல் ரூ.6300 வரை அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.
தேசிய பொருட்கள் மற்றும் மூலப் பொருள் வர்த்தக கழகத்தின் அக்டோபர் மாத டெலிவரி கணக்கின்படி மஞ்சள் விலை 1.12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே போன்று செப்டம்பர் மாத டெலிவரி கணக்கின்படி மசாலா பொருட்கள் குவிண்டாலுக்கு ரூ.44 முதல் ரூ.6200 வரை அதிகரிக்க உள்ளது.