Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/புதுகையில் காலை, மாலை மகளிர் பஸ் இயக்க பெற்றோர் கோரிக்கை

புதுகையில் காலை, மாலை மகளிர் பஸ் இயக்க பெற்றோர் கோரிக்கை

புதுகையில் காலை, மாலை மகளிர் பஸ் இயக்க பெற்றோர் கோரிக்கை

புதுகையில் காலை, மாலை மகளிர் பஸ் இயக்க பெற்றோர் கோரிக்கை

ADDED : ஆக 15, 2011 01:22 AM


Google News
புதுக்கோட்டை: 'பள்ளி, கல்லூரி மாணவிகளின் நலன் கருதி புதுக்கோட்டையிலிருந்து மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு காலை, மாலை நேரங்களில் மகளிர் பஸ் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முன்வரவேண்டும்' என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்டத்தின் இதரப் பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் நாள்தோறும் வந்துசெல்கின்றனர். குறிப்பாக அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில், ஆலங்குடி, அரிமளம், திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட் ட மாணவர்கள் வருகின்றனர். புதுக்கோட்டையிலிருந்து இப்பகுதிகளுக்கு போதிய பஸ்கள் இல்லாததால் மாணவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. பஸ் பயணத்தின்போது ஆபத்தை உணராமல் படிகட்டுகளிலும், ஏணிப்படிகளிலும் தொங்கியவாறு மாணவர்கள் பயணம் செய்யவேண்டிய கட்டாய நிலை உள்ளது. மாணவர்களுக்கு இந்த நிலை என்றால் மாணவிகளின் நிலை மிக மோசமாக உள்ளது. கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் சிலர் மாணவிகளிடம் சில்மிஷம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவமானம் கருதி இதை மாணவிகளும் கண்டிப்பதில்லை. தப்பித்தவறி அந்த பஸ்களில் பெற்றோர்கள் பயணம் செய்யும் போதுதான் மாணவர்களின் இதுபோன்ற சில்மிஷங்கள் வெளிப்படுவதுண்டு. இதன்காரணமாக பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதலும் அவ்வப்போது அரங்ககேறி வருகிறது. இதை தவிர்க்கும் விதமாக புதுக்கோட்டையிலிருந்து மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம், திருமயம், பொன்னமராவதி ஆ கிய பகுதிகளுக்கு காலை, மாலை நேரங்களில் மகளிர் பஸ் இ யக் க அரசு போக்குவரத்துக் கழகம் முன்வரவேண்டும் என பெ ற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மகளிர் நலனில் தனிக்கவனம் செலுத்திவரும் அரசு ஆட்சியல் உள்ளதால் மாணவிகள் நலன் கருதி மகளிர் பஸ் இயக்க புதுக்கோட் டை அரசு போக்குவரத்து க்கழகம் முன்வரும் என்ற நம்பி க்கையில் பெற்றோர் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us