ADDED : ஆக 13, 2011 04:09 AM
மதுரை:மதுரை பென்னர் காலனி அருகே முத்துத்தேவர் காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,நவமணி (59).
இவர் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக பென்னர் காலனியை சேர்ந்த மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் முத்துராஜா (49) மாநகராட்சி, கலெக்டரிடம் மனு அளித்தார். வீட்டை மாநகராட்சி அகற்றியது. இந்த ஆத்திரத்தில் தன்னை நவமணி, அவரது மனைவி கமலம், மகன் கிருஷ்ணகுமார் அவதூறாக பேசி, தாக்கியதாக முத்துராஜா எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். கிருஷ்ணகுமார் திருப்பூரில் ஆயுதப்படை போலீசாக பணிபுரிகிறார். எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.