ஊட்டி:'அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் பேரூராட்சி, சிற்றுராட்சிகளில்
வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலமலை உடல்
ஊனமுற்றோர் சங்க தலைவர் போஜன் மாவட்ட கலெக்டருக்கு கொடுத்துள்ள
மனு:நீலகிரியில் மாற்று திறனாளிகளுக்கு பேரூராட்சி, சிற்றூராட்சியில் மாதம்
750 ரூபாய் அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக
கூறப்பட்டது.
ஆனால், சமீபத்தில் இந்த வேலைவாய்ப்பு ஒரு குறிப்பிட்ட
சங்கத்திற்கே அளிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை எல்லா சங்கத்திற்கும்
பகிர்ந்து அளிக்க வேண்டும்.