Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மருத்துவ பணிக்கு அழைப்பு

மருத்துவ பணிக்கு அழைப்பு

மருத்துவ பணிக்கு அழைப்பு

மருத்துவ பணிக்கு அழைப்பு

ADDED : ஆக 07, 2011 01:53 AM


Google News

ஊட்டி : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் பணிபுரிவதற்கு அனைத்து பிரிவு மருத்துவம், அறுவை சிகிச்சை, ரேடியாலஜி, பாதாலஜி, பல் மருத்துவம், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அவசர மருத் துவ பிரிவுகளில் ஆலோசகர்கள், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் இருப்பிட மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழு அடுத்த மாதம் இந்தியா வர உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் மருத்தவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன், இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம், குடும்ப விசா மற்றும் இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us