/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிர் நல ஆய்வு மையம் துவக்கம்வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிர் நல ஆய்வு மையம் துவக்கம்
வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிர் நல ஆய்வு மையம் துவக்கம்
வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிர் நல ஆய்வு மையம் துவக்கம்
வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிர் நல ஆய்வு மையம் துவக்கம்
ADDED : ஆக 05, 2011 04:13 AM
புதுச்சேரி : புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலையத்தில், பயிர் நல ஆய்வு
மையம் நேற்று துவக்கப்பட்டது.பருவ நிலை மாற்றம் மற்றும் பல காரணங்களால்
நெல், மணிலா, பயறு வகைகள், கரும்பு, தென்னை தோட்டக்கலை பயிர்களான வாழை, மா,
சப்போட்டா, கொய்யா, பலா, நெல்லி உள்ளிட்ட பயிர்களில் பூச்சி, நோய்
தாக்குதல் ஏற்படுகிறது.இதைக் கட்டுப்படுத்த, காமராசர் வேளாண் அறிவியல்
நிலையத்தில் 10 லட்சம் ரூபாய் செலவில் நவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய
பயிர் நல ஆய்வகம் அமைக்கப்பட்டு, நேற்று துவக்கப்பட்டது.மண்டல திட்ட
இயக்குனர் பிரபு குமார், தேசிய வேளாண் தகவல் திட்ட முன்னாள் இயக்குனர்
மிருதுன்ஜெயா, உதய்பூர் கால்நடை பல்கலை கழக இயக்குனர் மலிவால், ராஜிவ்
காந்தி கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் ராவ், தமிழ்நாடு கால்நடை
மருத்துவ பல்கலை கழக துணைவேந்தர் பிரபாகரன் ஆகியோர் ஆய்வகத்தை திறந்து வைத்தனர்.
வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, வேளாண்
துறை இயக்குனர் சத்தியசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.புதுச்சேரி,
தமிழகத்தில் உள்ள 20 வேளாண் அறிவியல் நிலையங்களின் கடந்த நான்காண்டு
செயல்கள் குறித்த கருத்தரங்கமும், வேளாண் உபகரணங்கள், பயிர் சாகுபடி
குறித்த கண்காட்சியும் நடந்தது.