/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வி.கே.புரத்தில் தேமுதிக., செயல்வீரர்கள் கூட்டம்வி.கே.புரத்தில் தேமுதிக., செயல்வீரர்கள் கூட்டம்
வி.கே.புரத்தில் தேமுதிக., செயல்வீரர்கள் கூட்டம்
வி.கே.புரத்தில் தேமுதிக., செயல்வீரர்கள் கூட்டம்
வி.கே.புரத்தில் தேமுதிக., செயல்வீரர்கள் கூட்டம்
விக்கிரமசிங்கபுரம் : விக்கிரமசிங்கபுரத்தில் நகர தேமுதிகவின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் தலைமை வகித்தார்.
விக்கிரமசிங்கபுரம் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் சம்பந்தமாக தோண்டப்படும் குழியினை நகராட்சி ஊழியர்கள் சரியாக மூட வேண்டும். விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் ஒவ்வொன்றும் சுமார் 25 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 10 குப்பை அகற்றும் வண்டி இதுவரை செயல்பாட்டிற்கு வராததை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் நவ கைலாயத்தில் முதன்மை ஸ்தலமாக விளங்கும் பாபநாசம் கோயிலின் படித்துரையை சுத்தமாக வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட 7 மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இதுவரை நீர் ஏற்றாமலும், குடிநீருக்காக ஒதுக்கப்பட்ட நிதியினை சரியான முறையில் பயன்படுத்தாத நகராட்சி நிர்வாகத்தை கண்டிப்பதுடன் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தப்பட்டது.நகரில் 8வது வார்டு மேலக்கொட்டாரம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீரில் குப்பை சேர்வதால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளதை நகராட்சி நிர்வாகம் கவனிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும்
அகஸ்தியர் அருவியை சுற்றுலா ஸ்தலமாக்கி சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் பேசும்போது, ''விஜயகாந்த் பிறந்த நாளை ஆடம்பரம் இல்லாமல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் வழங்கி கட்சியினர் கொண்டாட வேண்டும்'' என்றார்.கூட்டத்தில் அம்பை நகர செயலாளர் முத்துப்பாண்டி, ஆழ்வார்குறிச்சி சண்முகம்சேட், மாவட்ட மாணவரணி செயலாளர் ஐயப்பன், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜோசப், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, மாரியப்பன், சரவணன், ரவிச்சந்திரன் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.