/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வளவனூரில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசல்: வாக்குறுதியை ஜெ., நிறைவேற்றுவாரா?வளவனூரில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசல்: வாக்குறுதியை ஜெ., நிறைவேற்றுவாரா?
வளவனூரில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசல்: வாக்குறுதியை ஜெ., நிறைவேற்றுவாரா?
வளவனூரில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசல்: வாக்குறுதியை ஜெ., நிறைவேற்றுவாரா?
வளவனூரில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசல்: வாக்குறுதியை ஜெ., நிறைவேற்றுவாரா?
விழுப்புரம் : விழுப்புரம், வளவனூரில் தொடரும் போக்குவரத்து நெருக் கடியை தவிர்க்க பைபாஸ் சாலை திட்டத்தை செயல்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும்.
வளவனூர் கூட்ரோடு பகுதியில் கடைகள் ஆக்கிரமித்துள்ளதால், குறுகலான இடத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லவும், சிறுவந்தாடு பகுதியிலிருந்து வரும் பஸ்கள், வாகனங்கள் திரும்பி வரவும் முடியாமல் எந்த நேரமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இங்கு பஸ் நிலையம் இல்லாததும், ஆக்கிரமிப்புகள் அகற்றாததும் பெரும் பிரச்னைக்கு காரணமாக உள்ளது.
மொத்தம் 7 மீட்டர் அகலத்தில் உள்ள விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலை, வளவனூரைக் கடக்கும் வரை 6 மீட்டர் அளவில் மட்டுமே நெருக்கடியாக அமைந்துள்ளது. வளவனூரில் 10 அடி அகலத்தில் நெடுஞ்சாலையோரம் செல்லும் வாய்க்கால் பகுதிகளுக்கு முன் நீண்ட காலமாக ஆக்கிரமித்துள்ள கடைகள் தார்சாலை விளிம்புவரை உள்ளதால் நெருக்கடி தொடர்கிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முயன்றபோதெல்லாம், அரசியல் ஆதாயத்திற்காக நடவடிக்கை தடைபட்டது. கடந்த 2004ம் ஆண்டு கலெக்டராக இருந்த கோபாலின் அதிரடி நடவடிக்கையில் வளவனூர் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது. மீண்டும் 2006ல் தி.மு.க., ஆட்சி வந் ததும் ஆக்கிரமிப்பாளர்கள் கை ஓங்கியது. இதனால் நெடுஞ்சாலைத் துறையினர் மாற்று திட்டமாக பைபாஸ் சாலை அமைக்க வரைவு திட்டங்களை தயார்படுத்தினர். விக்கிரவாண்டி-கும்பகோணம் நெடுஞ்சாலையில் கோலியனூர் கூட்ரோடு அருகே பைபாஸ் துவங்கி குமாரகுப்பம் காலனி வழியாக வளவனூரைக் கடந்து (விழுப்புரத்திலிருந்து 12வது கிலோ மீட்டரில்) குடுமியான்குப்பம் அருகே புதுச்சேரி சாலையில் பைபாசை இணைக்க ஒரு திட்டம் வகுத்தனர்.
அதன் பின் ஒட்டுமொத்தமாக விழுப்புரத்திற்கும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அருகே துவங்கி கும்பகோணம் நெடுஞ்சாலையைக் கடந்து வளவனூரை அடுத்துள்ள குடுமியான்குப்பத்தில் பைபாஸ் சாலை இணைக்க ஒரு திட்டமும், அதே போல் விழுப்புரம் முத்தாம்பாளையம் பைபாஸ் பகுதியில் துவங்கி வளவனூரைக் கடந்து குடுமியான்குப்பம் அருகே இணைக்கும் விதத்தில் ஒரு பைபாஸ் சாலைத் திட்டமும் வகுக்கப்பட்டது. இந்த மாதிரி திட்டங்கள் மத்திய நெடுஞ் சாலைத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பைபாஸ் சாலைத் திட்ட வரைவு குறித்து இது வரை எந்தவித அரசு அனுமதியும் கிடைத்தபாடில்லை. ஒருபுறம் அரசியல் காரணங்களால் வளவனூரிலும், விழுப்புரத்திலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. விழுப்புரத்திலிருந்து மதகடிப்பட்டு வரை, 7 மீட்டர் அகலத் திலுள்ள சாலை தற்போது 10 மீட் டர் அகலத்திற்கு நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்து பணிகள் நடந்து வருகிறது. சாலை ஆக்கிரமிப்பினால் வளவனூர் பகுதியில் இந்த விரிவாக்கப் பணிகள் செய்ய முடியாத நிலை உள்ளது.
விழுப்புரத்தில் போக்குவரத்து பிரச்னை தீர்க்கப்படும், வளவனூரில் பஸ் நிலையம் அமைக்கப்படுமென முதல்வர் ஜெ., தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதத்தில் வள வனூரில் பைபாஸ் சாலைத் திட்டத்தை நிறைவேற்றிட உள்ளூர் அமைச்சர் சண்முகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.