எம்.பி.,க்களுக்கு அன்னா ஹசாரே கடிதம்
எம்.பி.,க்களுக்கு அன்னா ஹசாரே கடிதம்
எம்.பி.,க்களுக்கு அன்னா ஹசாரே கடிதம்
ADDED : ஆக 03, 2011 01:49 AM

புதுடில்லி: காந்தியவாதி அன்னா ஹசாரே எம்.பி.,க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பார்லிமென்டில் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ள பலகீனமான லோக்பால் மசோதா மூலம், லஞ்ச ஊழலுக்கு எதிராக விவாதிக்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 'பார்லிமென்டேரியன்'களுக்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது என , தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என, டில்லி போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


