/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மறியலுக்கு முயன்ற பா.ம.க.,வினர் கைதுமறியலுக்கு முயன்ற பா.ம.க.,வினர் கைது
மறியலுக்கு முயன்ற பா.ம.க.,வினர் கைது
மறியலுக்கு முயன்ற பா.ம.க.,வினர் கைது
மறியலுக்கு முயன்ற பா.ம.க.,வினர் கைது
ADDED : ஆக 03, 2011 01:09 AM
ஓசூர்: ஓசூர் தாசில்தார் அலுவலகம் முன் மறியலுக்கு முயன்ற நூற்றுக்கும்
மேற்பட்ட பா.ம.க., வினரை போலீஸார் கைது செய்தனர்.ஓசூர் தாசில்தார் அலுவலகம்
முன் சமச்சீர் கல்வியை வலியுறுத்தி போராட்டம் நடத்த கிருஷ்ணகிரி மாவட்ட
பா.ம.க., செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில், அக்கட்சியினர் நேற்று காலை
போராட்டம் நடத்த அறிவித்திருந்தனர்.காலை 9 மணி முதல் அங்கு கட்சியினர்
குவிந்தனர். போலீஸார் அவர்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கவில்லை.
போலீஸார் எச்சரித்தும், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.
பொறுத்து, பொறுத்து பார்த்த போலீஸார், நைசாக தனியார் ஸ்கூல் பஸ்சை
வரழைத்து, போராட்டத்திற்கு தயாராகி கொண்டிருந்த மேற்கு மாவட்ட செயலாளர்
ஜெயரபிரகாஷ், வக்கீல் கதிரவன், அருண்ராஜ், சங்கர் உள்ளிட்ட 58 பேரை
போலீஸார் ஆர்ப்பாட்டம் செய்யும் முன் கைது செய்தனர்.ஆவேசமடைந்த பா.ம.க.,
வினர் போலீஸாரை மீறி தாசில்தார் அலுவலக சாலையில் மறியலுக்கு முயன்றனர்.
போலீஸார் விடாப்படியாக மறியல் செய்யவும் விடாமல் பஸ்சில் ஏற்றினர். அதனால்,
திட்டமிட்டப்படி மறியலில் ஈடுபட முடியாததால், ஏமாற்றமடைந்த பா.ம.க., வினர்
போலீஸாரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷமிட்டபடி சென்றனர்.


