ADDED : ஆக 02, 2011 11:31 PM
விருதுநகர் : விருதுநகர் அருகே 'வாக்கிங்' சென்ற முன்னாள் ஊராட்சி தலைவர் லட்சமணன், லாரி மோதி பலியானார்.
விருதுநகர் வச்சகாரபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் லட்சுமணன் .தே.மு.தி.க.,வை சேர்ந்த இவர் நேற்று காலை 6. 20 மணிக்கு விருதுநகர்- சாத்தூர் நான்கு வழிச்சாலையில் வெங்கடேஸ்வரா வாட்டர் சர்வீஸ் அருகே 'வாக்கிங்' சென்றார். அடையாளம் தெரியாத லாரி மோதி இறந்தார். வாகன எண் தெரியாததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, லாரி மற்றும் டிரைவரை கைது செய்ய வச்சகாரபட்டி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் ஒரு மணிக்கு லாரி டிரைவரை கைது செய்ய கூறி , சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மாரியப்பன் தலைமையில் 200 பேர் ரோடு மறியல் செய்தனர். போலீசார் சமரசத்திற்கு பின் மறியல் கைவிடப்பட்டது.