ADDED : ஜூலை 31, 2011 02:46 AM
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கெடார் கிராமத்தை சேர்ந்தவர் பழனி, 35.
இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். தனது இண்டிகா காரில் நேற்று காலை சென்னைக்கு சவாரி சென்று மீண்டும் மாலை கெடார் திரும்பினார். மாலை 6.15 மணியளவில் வீடுர் அணை கூட்ரோடு அருகே வரும் போது பின்னால் வந்த வாகனம் மோதி இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.