பெண்கள் திருமண உதவி திட்டம் நிறைவேற்றுவதில் அதிகாரிகள் குழப்பம்
பெண்கள் திருமண உதவி திட்டம் நிறைவேற்றுவதில் அதிகாரிகள் குழப்பம்
பெண்கள் திருமண உதவி திட்டம் நிறைவேற்றுவதில் அதிகாரிகள் குழப்பம்
சிவகங்கை : ஏழை பெண்கள் திருமண உதவி திட்டத்தில் கல்லூரி படிப்பு முடித்ததற்கான சான்றுக்கு பதில், கல்லூரி முதல்வரிடம் சான்று பெற அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று பட்டதாரி பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக அரசு திருமணமாகாத ஏழை பெண்களுக்கு, இளம் பெண்கள் திருமண உதவி திட்டம், கலப்பு திருமணம், விதவை மறுமணம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் நிதி வழங்குகிறது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், '' இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்கள் சிலர், கல்லூரி படிப்பு முடித்து அதற்கான சான்றிதழ் இரண்டு மாதம் கழித்து தான் கிடைக்கும் என தெரிவிக்கின்றனர். ஆனால் அரசோ, இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பித்துடன் திருமண அழைப்பிதழ், கல்வி சான்று, திருமணம் செய்யப்போகும் பெண் நன்றாக எனக்கு அறிந்தவர் என அரசு அலுவலர் ஒருவரின் சான்று, வி.ஏ.ஓ., சான்று இணைத்தால் மட்டுமே உதவித்தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சில பெண்களுக்கு திடீரென திருமண ஏற்பாடுகள் நடந்து விடுவதால் இவர்கள் பயன்பெற கல்லூரியில் இருந்து அத்தாட்சி வழங்கினால் போதும் என அறிவித்தால் மட்டுமே குழப்பம் ஏற்படாது,'' என்றார்.


