Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/செய்துங்கநல்லூர் அருகே சமுதாய நலக்கூடம்

செய்துங்கநல்லூர் அருகே சமுதாய நலக்கூடம்

செய்துங்கநல்லூர் அருகே சமுதாய நலக்கூடம்

செய்துங்கநல்லூர் அருகே சமுதாய நலக்கூடம்

ADDED : ஜூலை 30, 2011 12:49 AM


Google News
செய்துங்கநல்லூர்:செய்துங்கநல்லூர் அருகே எம்எல்ஏ.,நிதியிலிருந்து சமுதாய நலக் கூடம் அமைய உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.செய்துங்கநல்லூர் பஞ்.,சேர்ந்தது எஸ்.என்.பட்டி கிராமம். இங்குள்ள மக்கள் மும்பை, சென்னை போன்ற நகரங்களில் தொழில் செய்து வருகின்றனர். எனவே இக்கிராமத்தில் வயதானோர் மற்றும் சிலர் குடியிருந்து வருகின்றனர். வெளியூரில் பெரும்பாலானோர் வசித்து வந்தாலும் சொந்த ஊரில் தங்கள் வாரிசுகளுக்கு திருமணம், காதுகுத்து, சடங்கு போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மேலும் கோயில் கொடைவிழா போன்ற பொது நிகழ்ச்சிகளிலும் அவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். அச்சமயங்களில் பொது நிகழ்ச்சிகளை நடத்த சமுதாய நலக்கூடம் தேவைப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இக்கிராமத்திலுள்ள வடகரை சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா நடந்தது. இதில் வெளியூர் மக்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை துவக்கி வைக்க தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன் வந்தார். இத்துவக்க நிகழ்ச்சிக்கு ஊர் தலைவர் பழனி தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய அதிமுக.,செயலாளர் சிவசுப்பிரமணியன், யூனியன் சேர்மன் கோசல்ராம், மாவட்ட பஞ்.,தலைவர் சின்னத்துரை, மாவட்ட பஞ்.,கவுன்சிலர் திருபாற்கடல், அய்யனார்குளம் கிளை செயலாளர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வசந்தன் வரவேற்றார். பின்னர் அமைச்சர் சண்முகநாதன் பேசும் போது நடப்பு நிதியாண்டில் எம்எல்ஏ.,நிதியிலிருந்து இக்கிராமத்திற்கு சமுதாய நலக்கூடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். சங்கரன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us