/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அறிவியல் கண்காட்சியில்மாணவர்கள் அசத்தல்அறிவியல் கண்காட்சியில்மாணவர்கள் அசத்தல்
அறிவியல் கண்காட்சியில்மாணவர்கள் அசத்தல்
அறிவியல் கண்காட்சியில்மாணவர்கள் அசத்தல்
அறிவியல் கண்காட்சியில்மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜூலை 28, 2011 09:10 PM
மடத்துக்குளம் : கணியூர் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்ற
மாணவர்கள் படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
கணியூர்
வெங்கிடகிருஷ்ணாமேல்நிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை வட்டார
மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி தொடங்கி வைத்தார். ஆறு முதல் பத்தாம்
வகுப்புவரை உள்ள மாணவர்கள், மொபைல்போன் பேட்டரியில் எரியும் வகையில் செய்த
விளக்கு, காற்றையும் தண்ணீரையும் குடிநீர் பாட்டிலில் இணைத்து செய்த
ராக்கெட், காற்றாலைகள், லிப்ட் மாடல்கள், ஜேசிபி மாடல்கள் அனைவரையும்
கவர்ந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகள் கண்காட்சியில்
வைக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் மற்றும் அறிவியல்
ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


