Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பெண்ணை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

பெண்ணை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

பெண்ணை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

பெண்ணை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

ADDED : ஜூலை 28, 2011 01:55 AM


Google News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வரப்பு தகராறில் பெண்ணை அடித்து உதைத்த இரு வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி அடுத்த தானம்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி மஞ்சுளா (29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் (25), முனிராஜ்((23) ஆகியோருக்கும் இடையே பல ஆண்டாக நிலத்தகராறு இருந்து வருகிறது. இரு தரப்பினருக்கும் பொதுவான நிலத்தில் இருந்த வரைப்பை அன்பழகன் மற்றும் முனிராஜ் ஆகியோர் வெட்டியுள்ளனர். இதனை தட்டி கேட்ட மஞ்சுளாவை இருவரும் சரமாரியாக அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த மஞ்சுளா சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி தாலுகா எஸ்.ஐ., சுப்பிரமணி விசாரித்து அன்பழகன், முனிராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us