/உள்ளூர் செய்திகள்/தேனி/தேனியில் முதன் முறையாக பாதப்பரிசோதனைக்கு முகாம்தேனியில் முதன் முறையாக பாதப்பரிசோதனைக்கு முகாம்
தேனியில் முதன் முறையாக பாதப்பரிசோதனைக்கு முகாம்
தேனியில் முதன் முறையாக பாதப்பரிசோதனைக்கு முகாம்
தேனியில் முதன் முறையாக பாதப்பரிசோதனைக்கு முகாம்
ADDED : ஜூலை 27, 2011 10:38 PM
தேனி : தேனி மாவட்டத்தில் முதன் முறையாக சர்க்கரை நோயினால் பாதங்கள் பாதிக்கப்படுவதற்கு சிறப்பு முகாம் ஜூலை 31ல் தேனியில் நடத்தப்படுகிறது.
தேனி நலம் ஆஸ்பத்திரி, தினமலர் இதழ் இணைந்து 'சர்க்கரை நோய்க்கான இலவச பாதப்பராமரிப்பு முகாம்' தேனியில் நடத்துகின்றனர். ஜூலை 31 (ஞாயிறு) பெரியகுளம் ரோட்டில் ஸ்ரீ வாசவி மகாலில் நடக்கும் முகாமில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பரிசோதனைகள் நடத்தப்படும். சர்க்கரை நோயினால் பாதப்பராமரிப்பு, பாதங்களில் குறையேதும் இருப்பின் ஆலோசனை பெறவும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. என்னென்ன: கால்களின் ரத்த ஓட்டத்தை அறியும் டாப்ளர், கால் நரம்புகளின் தன்மையை அறியும் பயோதிஸியோமீட்டர், பாத அழுத்த உணர்வை கண்டறியும் கருவிகள், உடம்பின் முக்கிய நரம்புகளின் தன்மை அறியும் ஆன்ஸிஸ்கோப் ஆகிய அதிநவீன கருவிகளின் உதவியுடன் இலவச பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.