/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நிலக்கரி லாரி அச்சு முறிந்து போக்குவரத்து கடும் பாதிப்புநிலக்கரி லாரி அச்சு முறிந்து போக்குவரத்து கடும் பாதிப்பு
நிலக்கரி லாரி அச்சு முறிந்து போக்குவரத்து கடும் பாதிப்பு
நிலக்கரி லாரி அச்சு முறிந்து போக்குவரத்து கடும் பாதிப்பு
நிலக்கரி லாரி அச்சு முறிந்து போக்குவரத்து கடும் பாதிப்பு
ADDED : ஜூலை 26, 2011 12:09 AM
காரைக்கால் : காரைக்காலில் அளவுக்கு அதிகமாக நிலக்கரி ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் அச்சு முறிந்து நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதித்தது.காரைக்கால் வாஞ்சூரில் தனியார் கப்பல் துறைமுகம் உள்ளது.
இங்கிருந்து ரயில் மற்றும் லாரிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. 30 முதல் 40 டன் வரை நிலக்கரிகளை ஏற்றிச் சென்ற லாரிகளால் கடந்த ஜனவரி 1ம் தேதி திருப்பட்டினம் பாலம் உடைந்தது.ஒரு கோடி ரூபாய் செலவில் பாலம் பழுது பார்க்கப்பட்டுள்ளது. இப்பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதமாக காரைக்கால் வழியாக நிலக்கரி கொண்டுசெல்வது நிறுத்தப்பட்டு இருந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் தற்போது இப்பாலம் வழியாக லாரிகள் சென்று வருகின்றன.நேற்று தமிழகம் நோக்கி சென்ற டி.என். 23 கே 3799 என்ற லாரி திருப்பட்டினம் பாலத்தை கடந்து எம்.ஓ.எச்., சிக்னல் அருகே வந்தபோது லாரி அச்சு முறிந்து நடுரோட்டில் நின்றது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.