/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகுறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2011 09:48 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், தாலுகா அலுவலகத்தில் மனு எழுத வாய்ப்பு வழங்க கோரி மாற்றுதிறனாளிகள் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த ராஜேஷ்கண்ணா மற்றும் ரூத்செந்தில்நாயகி ஆகியோர் வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமியிடம் கொடுத்த மனு :
பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் மனு எழுத பல மாற்று திறனாளிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோல், மாற்று திறனாளிகளாக உள்ள எங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். பிளஸ் 2 வரை படித்து விட்டு, தனியாரிடம் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு வழங்கும் போது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும், என குறிப்பிடப்பட்டிருந்தது. வருவாய் கோட்டாட்சியர் கூறியதாவது: மாற்று திறனாளிகளுக்கு தாலுகா அலுவகத்தில் மனு எழுத வாய்ப்பு அளிக்கும் வகையில் 10 பேர் நியமிக்கப்பட்டனர். இதில், தற்போது மூன்று இடங்கள் காலியாகவுள்ளன. ஏற்கனவே, ஒருவர் மனு எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, இருவர் மனு கொடுத்துள்ளனர். இவர்கள் மனு எவ்வாறு எழுதுகின்றனர் என்பதை ஆய்வு செய்தபின், நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மனு எழுதுபவர்களிடம், ஐந்து ரூபாய் மட்டும் கட்டணமாக வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.