இதற்கிடையே, மற்றொரு வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, வேங்கட சமுத்திரத்தைச் சேர்ந்தவர் சிவனாண்டி; மனைவி பாப்பா. இவர்களுக்கு திருமங்கலம் அருகே செங்குளத்தில் 5.14 ஏக்கர் நிலம் உள்ளது. இதை மோசடி செய்து அபகரித்ததாக, பொட்டு சுரேஷ், நகர் செயலர் தளபதி உட்பட 4 பேர், ஜூலை 19 ல், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். நேற்று மதுரை அண்ணாநகர் அமர்நாத் என்பவரிடம், 51 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து, அபகரித்ததாக, பொட்டு சுரேஷ் உட்பட 6 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் மீது தொடர்ந்து புகார்கள் வர ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாகவும், புகார்தாரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனக் கருதியும், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., ஆஸ்ரா கர்க் பரிந்துரைத்தார். இதன் அடிப்படையில், அவரைக் கைது செய்ய கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார். இதன் நகலை காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை சிறையில் உள்ள பொட்டு சுரேஷிடம் வழங்கிய போலீசார், அமர்நாத் நிலத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்தனர். இவரைத் தொடர்ந்து, அட்டாக் பாண்டியையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீசார் தீவிரமாக உள்ளனர். தி.மு.க., நிர்வாகிகள் பலரும், நிலமோசடி வழக்கில் கைதாகி வரும் நிலையில், தங்கள் மீதும் குண்டர் சட்டம் பாயுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.