வருமான வரித்துறையில் பல ஆயிரம் பணியிடங்கள் காலி :பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்
வருமான வரித்துறையில் பல ஆயிரம் பணியிடங்கள் காலி :பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்
வருமான வரித்துறையில் பல ஆயிரம் பணியிடங்கள் காலி :பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்
புதுடில்லி : வருமான வரித்துறையில், பல ஆயிரம் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஏ.கே.கனோஜியா கூறுகையில், ''ஒட்டு மொத்தமாக வருமான வரித்துறையில், 22 சதவீதம் அதாவது, 53 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்தப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்தும் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன,'' என்றார்.
போதிய பணியாளர்கள் இல்லாததால், வழக்கமான வரி தொடர்பான பணிகள் கூட பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இதனால் 2010-2011ம் நிதியாண்டில், 2 லட்சத்து, 63 ஆயிம் கோடி ரூபாய் வரி வசூலிக்கப்படாமல் உள்ளது. இத்தகவலை மத்திய தலைமை தணிக்கை அதிகாரி, தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை விரைவில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பார்லிமென்ட் நிலைக் குழுவும் இந்தப் பணியாளர்கள் பற்றாக்குறையைச் சுட்டிக் காட்டி, விரைவில் அதைத் தீர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.


