Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நகைக்கடைகள் மூலம் ரூ. 300 கோடி வரி அரசுக்கு வரும் வாய்ப்பு: அன்பழகன்

நகைக்கடைகள் மூலம் ரூ. 300 கோடி வரி அரசுக்கு வரும் வாய்ப்பு: அன்பழகன்

நகைக்கடைகள் மூலம் ரூ. 300 கோடி வரி அரசுக்கு வரும் வாய்ப்பு: அன்பழகன்

நகைக்கடைகள் மூலம் ரூ. 300 கோடி வரி அரசுக்கு வரும் வாய்ப்பு: அன்பழகன்

ADDED : ஆக 29, 2011 10:55 PM


Google News

புதுச்சேரி : 'நகைக் கடைகளில் பில் போடுவதில்லை.

நகைக் கடைகள் மூலம் 300 கோடி ரூபாய் அளவுக்கு வரி வரும் வாய்ப்புள்ளது' என, அன்பழகன் எம்.எல்.ஏ., பேசினார். பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: வரியில்லாத பட்ஜெட் போடுவது பெருமையான விஷயமல்ல. மக்களுக்குப் பாதிப்பில்லாமல் வரி விதிக்க வேண்டும். மது, சிகரெட் போன்றவற்றுக்கு வரி விதிக்கலாம். நல்ல நிர்வாகத்தை கொடுப்பதுதான், நல்ல முதல்வருக்கு அழகு. ஏனாமில் இயற்கை எரிவாயு பைப் லைன் அமைத்ததற்கு, ராயல்ட்டி தொகை பெறாமல், மொத்தமாக ரூ.55 கோடி பெறப்பட்டு, முழுவதும் ஏனாமிற்கே செலவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசுக்கு ஒரு பைசாகூட வரவில்லை. தற்போது குஜராத் பெட்ரோல் கார்ப்பரேஷன், ஏனாம் வழியாக பைப் லைன் அமைக்க உள்ளது. இத் திட்டத்திற்காவது ஆண்டுதோறும் நமக்குச் சேர வேண்டிய ராயல்டி தொகையைப் பெற்று, மாநில கணக்கில் கொண்டு வர வேண்டும். மது கொள்கையில் அரசு தள்ளாடுகிறது. இங்குள்ள டிஸ்டில்லரிகள் தயாரிக்கும் மது வகைகளை தாமே நேரடியாக மது கடைகளுக்கு விற்கின்றன. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அரசு ஒரு கார்ப்பரேஷன் அமைத்து, அதன் மூலம் மது வகைகளை சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். பெட்ரோல் பங்க்குகள் 180 கோடிக்கும் அதிகமாக வரி பாக்கி வைத்துள்ளன. இதை வசூலிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. வரிச் சலுகையைப் பயன்படுத்தி, பெட்ரோல் , டீசல் கடத்தும் கேந்திரமாக புதுச்சேரி மாறிவிட்டது. நகைக் கடைகளில் பில் போடுவதில்லை. நகைக் கடைகள் மூலம் 300 கோடி ரூபாய் அளவுக்கு வரி வரும் வாய்ப்புள்ளது. மின் துறையில் 16 சதவீதம் லைன் லாஸ் உள்ளது. பெரிய தொழிற்சாலைகளில் மின் திருட்டு நடக்கிறது. அரசுத் துறைகளில் முறையற்ற நியமனங்கள் நடக்கிறது. இதைக் கட்டுப்படுத்த, அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்த வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட 4000 பேர் விஷயத்தில் அரசு முடிவெடுக்க வேண்டும். இலவசங்கள் மாநில வளர்ச்சிக்கு உகந்ததல்ல. தனி நபர் வருமானத்தை அதிகப்படுத்தும் வழி வகையைக் காண வேண்டும். பட்ஜெட்டிற்குப்பிறகு வரி போடுவது, ஏமாற்றும் செயலாக உள்ளது. இவ்வாறு அன்பழகன் பேசினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us