ADDED : ஆக 22, 2011 10:51 PM
புதுச்சேரி : விவேகானந்தா கோச்சிங் சென்டரில் ஆங்கில வழி மாணவர்களுக்கு சமச்சீர் பாடபுத்தகம் வழங்கும் விழா நேற்று நடந்தது.
முதலியார்பேட்டை விவேகானந்தா கோச்சிங் சென்டரில் பத்தாம் வகுப்பு பயிலும் ஆங்கில வழி மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடபுத்தகம் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் கோச்சிங் சென்டர் நிர்வாகி வி.சி.சி.நாகராஜன் மாணவர்களுக்கு சமச்சீர் புத்தகங்களை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் விவேகானந்தா கோச்சிங் சென்டர் ஆசிரியர் ராஜசேகர், அலுவலக ஊழியர்கள் லட்சுமணன், லாலு, இந்துரு, மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.