தமிழ் வளர்ச்சி அலுவலகங்களுக்கு ஜீப்கள்
தமிழ் வளர்ச்சி அலுவலகங்களுக்கு ஜீப்கள்
தமிழ் வளர்ச்சி அலுவலகங்களுக்கு ஜீப்கள்
ADDED : ஆக 17, 2011 12:40 AM
சென்னை : தமிழ் வளர்ச்சித் துறை செயல்படுத்தும் பணிகளை ஆய்வு செய்ய வசதியாக, ராமநாதபுரம், கரூர், கடலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, தர்மபுரி, தூத்துக்குடி மாவட்டங்களின் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு, புதிய ஜீப்கள் வாங்க, முதல்வர் ஒப்புதல் அளித்திருந்தார்.
அதன்படி வாங்கப்பட்ட ஜீப்களின் சாவிகளை, அதன் ஒட்டுனர்களிடம் முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் நேற்று ஒப்படைத்தார்.