பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஆக 09, 2011 02:28 AM
கூடலூர் : பெரியாறு அணை நிர்பிடிப்பு பகுதியில், கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று அணையின் நீர் வரத்து வினாடிக்கு 3,809 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி 121.80 அடியாக இருந்தது. அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு 1,230 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 2984 மில்லியன் கன அடியாகும்.


