Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வஉசி., துறைமுகத்தில் ரூ.332 கோடியில் இரண்டாவது சரக்கு பெட்டக தளம் அமைக்கும் பணி

வஉசி., துறைமுகத்தில் ரூ.332 கோடியில் இரண்டாவது சரக்கு பெட்டக தளம் அமைக்கும் பணி

வஉசி., துறைமுகத்தில் ரூ.332 கோடியில் இரண்டாவது சரக்கு பெட்டக தளம் அமைக்கும் பணி

வஉசி., துறைமுகத்தில் ரூ.332 கோடியில் இரண்டாவது சரக்கு பெட்டக தளம் அமைக்கும் பணி

ADDED : ஜூலை 30, 2011 01:10 AM


Google News
தூத்துக்குடி:வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 332 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் இரண்டாவது சரக்கு பெட்டக தளத்தை அமைப்பதற்கு தகுதியான ஒப்பந்ததாரர் தேர்விற்கு துறைமுக நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது.வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் சுப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் தற்போதைய கொள்ளளவு 23.72 மில்லியன் டன்களாகும். துறைமுக நிர்வாகம் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலோடு பல உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. வளர்ச்சித் திட்டப் பணிகள் முடிந்தால் துறைமுகத்தின் கொள்ளளவு 61.78 மில்லியன் டன்களாக உயரும். துறைமுகத்தின் தற்போது பல்வேறு வகை சரக்குகளைக் கையாளுவதற்கு 13 தளங்களும், சரக்குப் பெட்டங்களைக் கையாளுவதற்கு ஒருதளமும் உள்ளன. 2010-11 நிதியாண்டில் வஉசி துறைமுகம் 4 லட்சத்து 67 ஆயிரத்து 752 டி.இ.யூ. சரக்குப் பெட்டங்கள் உள்ளடக்கி, 25.73 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு 8.16 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. துறைமுகத்தில் கட்டப்பட்டுள்ள எட்டாவது தளத்தில் தற்போது பொது சரக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. துறைமுகத்தின் சரக்குப் பெட்டகங்களின் போக்குவரத்து கணிசமான அளவில் உயர்ந்து கொண்டே வருவதால் எட்டாவது சரக்குத் தளத்தை சரக்குப் பெட்டகத் தளமாக மாற்றுவதற்காக 332 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் ஒரு திட்டத்தை தீட்டியது. இதன்மூலம் துறைமுகத்தில் இரண்டாவது சரக்குப் பெட்டகத் தளம் உருவாகுவதற்கு வழி செய்யப்பட்டது.

துறைமுகத்தில் இரண்டாவது சரக்கு பெட்டகத் தளம் தேவையா என்பதை மீண்டும் ஒருமுறை இந்திய துறைமுகங்களின் கூட்டமைப்பின் மூலம் மறுஆய்வு செய்யப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் இரண்டாவது சரக்குப் பெட்டகத் தளத்தின் தேவை அறியப்பட்டது. இதே சமயத்தில் மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் மோ னோபோலி கொள்கை மற்றும் பி.எஸ்.ஏ சிகால் டெர்மினல் லிமிடெட் நிறுவனத்தின் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் எட்டாவது சரக்குத் தளத்தை சரக்கு பெட்டக தளமாக மாற்றுவதற்குத் தேவையான முதல் கட்ட நடவடிக்கையாக அப்பணிக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரிய ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து பெறப்பட்ட ஒப்பந்த புள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு அவை அனைத்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கைக்கு தேர்வு செய்யப்பட்டன. வஉசி., துறைமுகப் பொறுப்புக் கழக நிர்வாகக் குழு மேற்சொன்ன ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து பெறப்பட்ட முதல் கட்ட ஒப்பந்த புள்ளிகளுக்கு ஒப்பந்தக்காரர்கள் மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு விலக்கை பெற வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் ஒப்புதல் அளித்து அவை இரண்டாவது கட்ட ஒப்பந்தப் புள்ளிகளுக்கு செல்ல வகை செய்யப்பட்டது. அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு இரண்டாவது கட்ட ஒப்புதல் கோர ஒப்புதல் அளித்தது. இந்த பணிகள் விரைவில் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us