ADDED : ஜூலை 24, 2011 02:45 AM
பந்தலூர் : பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் யுவதரா கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.எருமாடு பகுதியில் செயல்பட்டு வரும் யுவதரா கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தலைவராக கிரீஷ்தேவ், துணை தலைவர் முத்துக்குமார், செயலாளர் ஜோனப், துணை செயலாளர் ஷமீர், பொருளாளர் நாசர் தேர்வு செய்யப்பட்டனர். இனி வரும் காலங்களில் கிளப் சார்பில் சமூக பணிகள் மேற்கொள்வது; ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவுவது; விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


