Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் வாலிபரை தாக்கிய இருவர் கைது

நெல்லையில் வாலிபரை தாக்கிய இருவர் கைது

நெல்லையில் வாலிபரை தாக்கிய இருவர் கைது

நெல்லையில் வாலிபரை தாக்கிய இருவர் கைது

ADDED : ஆக 30, 2011 12:07 AM


Google News

திருநெல்வேலி : நெல்லையில் வாலிபரை தாக்கியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை டவுன் வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் செய்யது இப்ராகிம் பாட்ஷா(25). நேற்றுமுன்தினம் இவர் அதே பகுதியில் மோட்டார்பைக்கில் சென்ற போது மற்றொரு பைக் உரசிவிட்டு சென்றது. உரசிய பைக்கில் சென்ற இருவருக்கும், செய்யது இப்ராகிம் பாட்ஷாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் செய்யது இப்ராகிம் பாட்ஷாவை கற்களால் தாக்கினர். காயமடைந்த செய்யது இப்ராகிம் பாட்ஷா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் விசாரித்து அதே பகுதியை சேர்ந்த குமார், கார்த்திக்கை கைது செய்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us