/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுக் குழுஅனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுக் குழு
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுக் குழு
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுக் குழு
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுக் குழு
ADDED : ஆக 01, 2011 01:27 AM
விழுப்புரம் : அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
மாநில இணை தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். செல்வராஜ் வரவேற்றார். மாநில மகளிரணி தலைவி மாயாதேவி, மாநில இணை தலைவர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் மணிகண் டன் பேரவை வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.சமச்சீர் தொடர்பாக நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் கல்விப் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிப்பது. ஆசிரியர் பேரவை புதிய மாவட்ட தலைவராக செல்வராஜ், மாவட்ட செயலாளர் ரவி, பொருளாளராக செந்தில்குமார், மாவட்ட மகளிரணி தலைவராக மணிமேகலை தேர்வு செய்தல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிர்வாகிகள் சக்திவேல், இளங்கோ, இளவரசன், மணி, சந்திரசேகர், முருகன், புவனேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிர்வாகி அசோகன் நன்றி கூறினார்.