கால்நடை மருத்துவ அலுவலர் சங்கமாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு
கால்நடை மருத்துவ அலுவலர் சங்கமாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு
கால்நடை மருத்துவ அலுவலர் சங்கமாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு
ADDED : அக் 09, 2011 01:42 AM
திருச்சி;திருச்சியில், நேற்று நடந்த கால்நடை மருத்துவ அலுவலர் சங்க கூட்டத்தில், மாநிலத் தலைவராக காஞ்சிபுரம் டாக்டர் அம்பேத்கரும், பொதுச் செயலராக தஞ்சை டாக்டர் நெடுஞ்செழியனும் தேர்வு செய்யப்பட்டனர்.திருச்சி அஜந்தா ஹோட்டலில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் சின்னதுரை தலைமை வகித்தார். சேலம் மண்டல கால்நடைத் துறை இணை இயக்குனர் பி.ஜே.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், தமிழ்நாடு கால்நடைத் துறை கூடுதல் இயக்குனர்கள் பதர் நசருல்லா கான், டாக்டர் காஜா மொய்தீன் ஆகியோர், சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். கால்நடைத் துறை இணை மற்றும் உதவி இயக்குனர்கள் என, 175க்கும் மேற்பட்டோர் பொதுக்குழுவில் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரியாக, சேலம் மண்டல கால்நடைத் துறை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் செயல்பட்டார்.
சங்கத்தின் புதிய மாநில பொதுச் செயலராக, தஞ்சையைச் சேர்ந்த டாக்டர் நெடுஞ்செழியனும், தலைவராக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கரும், துணைத் தலைவராக நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் பிரகாசமும், இணைச் செயலராக சேலத்தைச் சேர்ந்த டாக்டர் சுந்தர்ராஜனும், பொருளாளராக தூத்துக்குடியைச் சேர்ந்த டாக்டர் நந்தகோபாலும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் அனைவரும், உடனடியாக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.அப்போது, 'சங்கத்தின் ஒற்றுமைக்காகவும், உறுப்பினர்களின் கோரிக்கைக்காகவும் அயராது பாடுபடுவோம்' என்று, புதிய நிர்வாகிகள் உறுதியளித்தனர்.புதிய நிர்வாகிகளால், செயற்குழுக் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.புதிய நிர்வாகிகள் பதவியேற்ற பின், டாக்டர் முகமது கனி நன்றி கூறினார்.


