இந்து முன்னணி பொதுக் குழு துவக்கம்
இந்து முன்னணி பொதுக் குழு துவக்கம்
இந்து முன்னணி பொதுக் குழு துவக்கம்
ADDED : அக் 02, 2011 01:02 AM
திருப்பூர்:இந்து முன்னணி மாநில பொதுக் குழு கூட்டம், நேற்று திருப்பூரில் துவங்கியது.
தமிழகம் முழுவதிலும் இருந்து, நிர்வாகிகள் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர்.திருப்பூர் செவந்தாம்பாளையம் ரோடு, வித்யா கார்த்திக் மண்டபத்தில், இந்து முன்னணி மாநில பொதுக் குழு கூட்டம், நேற்று காலை துவங்கியது. மாநில பொதுச் செயலர் சுப்ரமணியம் தலைமை வகித்தார்.மாநிலத் தலைவர் அரசு ராஜா, செயலர்கள் அண்ணாதுரை, சண்முகசுந்தரம், பரமேஸ்வரன், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் பேசினார்.இந்து முன்னணி வளர்ச்சி, எதிர்காலத் திட்டங்கள் குறித்தும், சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தல்; மதக் கலவரத் தடுப்பு மசோதாவைக் கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தல் உள்ளிட்ட, முன்மொழியப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் மீது விவாதம் நடந்தது.பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர். இரண்டாவது நாளாக, இன்றும் பொதுக் குழு கூட்டம் நடக்கிறது.


