3,363 பதவிக்கு 14,153 மனுத்தாக்கல்
3,363 பதவிக்கு 14,153 மனுத்தாக்கல்
3,363 பதவிக்கு 14,153 மனுத்தாக்கல்
ADDED : செப் 30, 2011 01:58 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 3,363
பதவிகளுக்கு, 14,153 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.வேட்புமனுதாக்கல்
செய்ய கடைசி நாளான நேற்று ஒரே நாளில் மட்டும், மேயர் பதவிக்கு 18 பேர்,
மாநகராட்சி கவுன்சிலருக்கு 474, நகராட்சி தலைவருக்கு 31, நகராட்சி
கவுன்சிலருக்கு 363, மூன்றாம் நிலை நகராட்சி தலைவருக்கு 11, கவுன்சிலருக்கு
82, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 84, யூனியன் கவுன்சிலருக்கு 566,
டவுன் பஞ்சாயத்து தலைவருக்கு 200, டவுன் பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 1,203,
பஞ்சாயத்து தலைவருக்கு 654, பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு 3,067 பேர்
என, மொத்தம் 6,753 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.கடந்த 22ம் தேதி
துவங்கி நேற்று வரை ஒரு மேயர் பதவிக்கு 41 பேர், மாநகராட்சி கவுன்சிலர் 60
இடங்களுக்கு 729, மூன்று நகராட்சி தலைவர் பதவிக்கு 43, நகராட்சி கவுன்சிலர்
84 இடங்களுக்கு 559 மனு, 3ம் நிலை நகராட்சி தலைவர் ஒரு பதவிக்கு 13,
அங்குள்ள 18 கவுன்சிலர் இடங்களுக்கு 119 மனு, 42 டவுன் பஞ்சாயத்து தலைவர்
பதவிக்கு 394 பேர், 630 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 2,601 பேர்,
19 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 151 பேர், 183 யூனியன்
கவுன்சிலர் பதவிக்கு 1,208 பேர், 225 பஞ்சாயத்து தலைவர் இடங்களுக்கு 1,535
பேர், 2,097 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் இடங்களுக்கு 6,760 பேர் என,
3,363 இடங்களுக்கு 14,153 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.இன்று
வேட்பு மனுக்களை ஆய்வு செய்தலும், அக்டோபர் 3ம் தேதி வேட்பு மனுக்களை
திரும்ப பெறுதலும் நடக்கிறது.
அக்டோபர் 17, 19ம் தேதிகளில் தேர்தலும், 21ம்
தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.