போர் நிறுத்தம் செய்ய ஹமாஸ் ஒப்புதல்; அமெரிக்கா திட்டத்தை ஏற்க சம்மதம்
போர் நிறுத்தம் செய்ய ஹமாஸ் ஒப்புதல்; அமெரிக்கா திட்டத்தை ஏற்க சம்மதம்
போர் நிறுத்தம் செய்ய ஹமாஸ் ஒப்புதல்; அமெரிக்கா திட்டத்தை ஏற்க சம்மதம்

நியூயார்க்: காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு தீர்வு காண, அமெரிக்கா தயார் செய்துள்ள சமரசத் திட்டத்தை ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காசா திட்டுப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், இஸ்ரேலில் புகுந்து நடத்திய தாக்குதல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பேர் பிணைக்கதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது. டிரம்ப் எச்சரிக்கையை தொடர்ந்து பிணைக் கைதிகளில் பெரும்பகுதியினரை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். ஆனால் முழுமையாக விடுதலை செய்யவில்லை. சிறிது காலம் போர் நிறுத்தம் செய்து காத்திருந்த இஸ்ரேல், இப்போது மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
தினமும் ஏராளமான பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, அமெரிக்க அதிபரின் தூதர் விட்காப் சமரசத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
அவர் தயார் செய்துள்ள திட்டத்தை ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.இந்தத் திட்டத்தை இஸ்ரேல் அரசு ஏற்றுக் கொண்டால் போர் நிறுத்தம் அமலுக்கு வரவும், மீதமுள்ள பிணை கைதிகள் விடுதலை செய்யப்படவும் வாய்ப்பு உருவாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.