Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/இ.யூ., முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்

இ.யூ., முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்

இ.யூ., முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்

இ.யூ., முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்

ADDED : செப் 28, 2011 11:34 PM


Google News

தர்மபுரி: தர்மபுரியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் அன்வர்பாஷா தலைமை வகித்தார்.

மாநில ஆலோசனை குழு உறுப்பினர் அப்துல்காதர் முன்னிலை வகித்தார். செயலாளர் நிசாமுதின் வரவேற்றார். உள்ளாட்சி தேர்தல் போட்டி குறித்தும், தேர்தல் போட்டியிடும் இடங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ப்ளஸ் 1 படிக்கும் முஸ்லிம் மாணவிகளுக்கான மவுலானான ஆஸாத் கல்வி பவுண்டேஷன் வழங்கும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் உறுப்பினர்களுக்கு வழங்கி விண்ணப்பிக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாடு கழகம் (டாம்ப செட்கோ) மூலம் சில்லறை வியாபாரம், வியாபார அபிவிருத்து, கைவினைஞர் மற்றும் மரபு சார்ந்த தொழில்கள் தொழில் மற்றும் தொழில் சேவை நிலையங்கள், போக்குவரத்து மற்றும் விவசாயம் தொடர்பான சிறு தொழில்களுக்கான தனி நபர் கடன் பற்றி எடுத்து கூறப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் நிசாமுத்தின் மற்றும் நகர துணை தலைவர் ஜலால் ஆகியோர் செய்திருந்தனர். பொருளாளர் பண்டு இப்ராஹிம் நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us